/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்
/
வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்
வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்
வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்
ADDED : மே 17, 2025 12:49 AM

ராமநாதபுரம்: பக்ரைன் நாட்டில் மீன்பிடித்தொழில் செய்த போது கடலில் விழுந்து இறந்த பாம்பனை சேர்ந்த மீனவர் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
பாம்பன் காமராஜர் நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிமோன்சன் மனைவி மரிய செல்சியா, அவரது உறவினர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில் எனது கணவர் சிமோன்சன் பக்ரைன் நாட்டில் உள்ள ஜாவ் என்ற பகுதியில் மீன்பிடி தொழில் செய்த போது ஏப்.20 ல் கடலில் தவறி விழுந்து இறந்தார். அதன் பிறகு போதிய வருமானம் இல்லாமல் இரு குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன்.
எனவே குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஒரு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.