ADDED : டிச 15, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் வாலாங்குடி கிராமத்தில் அட்மா திட்ட பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
உயிர் உரங்கள் பயன்பாடு, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு, களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்பாடு, வயல்களில் காணப்படும் பூச்சிகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

