/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத நெல் பயிரிட்டு விவசாயி சாதனை
/
பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத நெல் பயிரிட்டு விவசாயி சாதனை
பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத நெல் பயிரிட்டு விவசாயி சாதனை
பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத நெல் பயிரிட்டு விவசாயி சாதனை
ADDED : ஜன 13, 2025 06:24 AM

திருவாடானை : பூச்சி, நோய் தாக்குதில் இல்லாத நெல் பயிரிட்டு விவசாயி சாதனை படைத்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் ஆண்டுதோறும் 26,680 எக்டேரில் சாகுபடி நடக்கிறது. நெற்பயிர்கள் வளர்ந்து வரும் போது பூச்சி, நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதனால் விவசாயிகள் பல ஆயிரம் செலவு செய்தும் பயனில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கடந்து இரு ஆண்டுகளாக பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத புதிய ரகம் பயிரிட்டு விவசாயி சாதனை படைத்துள்ளார். திருவாடானை அருகே விசும்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:
டீலக்ஸ் பொன்னி 1262 புதிய ரகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக 5 ஏக்கரில் பயிரிட்டேன். புகையான், குலைநோய் போன்ற எந்த நோயும் தாக்கவில்லை. ஏக்கருக்கு 40 முதல் 50 மூடை விளைச்சல் கிடைக்கிறது. மூன்று அடிக்கு மேல் உயரமாக வளர்கிறது.
நீர்பிடிப்பு பகுதிகளுக்கு ஏற்ற நெல் ரகமாக உள்ளது. வயலில் தண்ணீர் தேங்கியிருந்தாலும் சாயாது. 130 முதல் 140 நாட்களில் அறுவடை செய்யலாம் என்றார்.