ADDED : டிச 11, 2025 05:27 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைந்த பண்ணையம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பதால் லாபம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பண்ணை குட்டையில் மீன் வளர்த்தல், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு மூலம் விவசாயிகள் பலன் அடையலாம் என்றனர்.
