/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் விவசாயிகள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
/
நயினார்கோவிலில் விவசாயிகள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
நயினார்கோவிலில் விவசாயிகள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
நயினார்கோவிலில் விவசாயிகள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 05:30 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தை நோக்கி விவசாயிகள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். கவுரவ செயலாளர் ரத்தின சபாபதி, நிர்வாகிகள் நாகலிங்கம், லோகநாதன், கோபால், நவநீதன் முன்னிலை வகித்தனர்.
அப்போது நயினார்கோவில் ஒன்றியத்தில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல், மிளகாய், தென்னை, வாழை, பருத்தி, கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்க கூடாது. எஸ்.வி. மங்களம் குரூப்பில் பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
நயினார்கோவிலில் அதிகமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
காசிராஜன், சந்தவெளியான், புருஷோத்தமன், காளிதாஸ், பஞ்சவர்ணம், கோவிந்தராஜ், அசோகன், நாகலிங்கம் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.