/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களையெடுக்க ஆட்கள் கிடைக்காததால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

ADDED : நவ 13, 2024 04:32 AM

திருப்புல்லாணி : சமீபத்தில் பெய்த மழையால் நெல் வயல்களில் தேங்கியுள்ள நீரில் அதிகளவில் களைச் செடிகள் வளர்ந்துள்ளதால் களை பறிக்க கூலி ஆட்கள் கிடைக்காததால் களைக்கொல்லி மருந்து தெளிக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
நெற்பயிர்கள் ஓரளவு வளர்ந்துள்ள நிலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதிகளவில் களைச்செடிகள் வளர்ந்துள்ளது. நெட்டி, சிலுங்கி கோரை, வெஞ்சா, நீள புற்கள் உள்ளிட்ட களைச்செடிகள் வளர்கின்றன. நெல்லை தவிர மற்ற களைச்செடிகளை களைக்கொல்லி மருந்துகள் அழிக்கும் திறன் கொண்டது. முறையாக மழை பெய்யாத ஈரப்பதம் உள்ள இடங்களில் பெண்கள் களை எடுக்கின்றனர். காலை 8:00 முதல் மதியம் 3:00 மணி வரை களை எடுப்பதற்கு ரூ.400 கூலியாக வழங்கப்படுகிறது. பெரும்பாலும் ஆண்கள் களை எடுப்பதற்கு வருவதில்லை.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரவழைக்கப்படும் விவசாய தொழிலாளர்கள் மொத்த கான்ட்ராக்ட் பேசி களை எடுப்பதற்கு செல்கின்றனர்.
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தீவிரமாக களைக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது என்றனர்.