/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்
/
ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்
ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்
ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜன 30, 2024 12:21 AM
----ராமநாதபுரம்- -ராமநாதபுரம் மாவட்ட மண்ணுரிமை பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 250 இடங்களில் நீரியல் விரிசல் முறையில் சோதனை கிணறுகள் தோண்ட ஒ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு மத்தியரசு 1403. 97 சதுர கி.மீ.,க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதிக்காக மட்டும் காத்திருக்கிறது.
இதனை கண்டித்து ராமநாதபுரம் மண்ணுரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடந்தது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி பாண்டியன்தலைமை வகித்தார். ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது, என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாம் தமிழர் லோக்சபா தொகுதி செயலாளர் குமரன், மாவட்டத்தலைவர் நாகூர்கனி, செயலாளர் கண்.இளங்கோ, எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்ஜமீல், வைகை பாசன விவசாயிகள் சங்கம் பாக்கியநாதன், வீரமுத்தரையர்சங்கத்தினர் பங்கேற்றனர். -------