/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளால் அவதி
/
விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளால் அவதி
ADDED : மே 18, 2025 12:15 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளை காட்டுப்பன்றிகள் அச்சுறுத்தி வருகிறது.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நெல், பருத்தி, மிளகாய் உள்பட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
முதுகுளத்துார் அருகே பொசுக்குடி, முத்துவிஜயபுரம், பிரபக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதத்திற்கு முன்பு காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தற்போது முதுகுளத்துார் அருகே சடையனேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய வேலை செய்யும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.நேற்று முன்தினம் விவசாயியை தாக்கின.
இதனால் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.