/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிரின் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
பயிரின் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பயிரின் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பயிரின் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : நவ 11, 2025 03:30 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பயிரின் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 650 எக்டேர் நிலங்களில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது பயிர்கள் வளர்ச்சி யடைந்துள்ள நிலையில் மழை பெய்யவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பழயணக்கோட்டை, செக்காந்திடல், காடாங்குடி, அச்சங்குடி, தினையத்துார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வயலில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக துவங்கியுள்ளது. மழை பெய்தால் மட்டுமே பயிர்களுக்கு நல்லது. இல்லையேல் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றனர்.