sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பொருளீட்டு கடன்பெறலாம்

/

விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பொருளீட்டு கடன்பெறலாம்

விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பொருளீட்டு கடன்பெறலாம்

விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பொருளீட்டு கடன்பெறலாம்


ADDED : பிப் 14, 2025 07:07 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள 6 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து அவற்றிற்கு வங்கியில் பொருளீட்டு கடன் பெறலாம்.

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படுகிறது. விளைபொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சியடைகிற காலங்களில் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள கிட்டங்கிகளில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் இடைத்தரகர்கள் இன்றி மறைமுக ஏலம் மூலம் வெளிப்படைத் தன்மையான வர்த்தக முறையில் விற்பனை செய்து 48 மணி நேரத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காலங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 180 நாட்கள் வரை இருப்பு வைத்து 5 சதவீதம் வட்டிக்கு ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். எட்டிவயலில் 2000 டன் குளிர்பதன கிட்டங்கியில் மிளகாய், மல்லி ஆகிய பொருட்களை வாடகை செலுத்தி இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம்-96778 44623, பரமக்குடி-97918 75405, கமுதி- 97888 43566, ஆர்.எஸ்.மங்கலம் - 86083 92299, முதுகுளத்துார் - 90473 15264 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us