/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீரை தேக்க கண்மாய், வாய்க்கால்களை துார்வாரவில்லை விவசாயிகள் குமுறல்: மழை நிவாரணம் வரல.. உரம் அதிக விலைக்கு விற்பனை
/
நீரை தேக்க கண்மாய், வாய்க்கால்களை துார்வாரவில்லை விவசாயிகள் குமுறல்: மழை நிவாரணம் வரல.. உரம் அதிக விலைக்கு விற்பனை
நீரை தேக்க கண்மாய், வாய்க்கால்களை துார்வாரவில்லை விவசாயிகள் குமுறல்: மழை நிவாரணம் வரல.. உரம் அதிக விலைக்கு விற்பனை
நீரை தேக்க கண்மாய், வாய்க்கால்களை துார்வாரவில்லை விவசாயிகள் குமுறல்: மழை நிவாரணம் வரல.. உரம் அதிக விலைக்கு விற்பனை
ADDED : அக் 18, 2025 03:49 AM

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலு வலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். கலெக்டர் வருவதற்கு முன் கடந்த கூட்டத்தில் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டவிபரம்:
மைக்கேல், பொன்னக்க னேரி: செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று வருதற்கு விவசாயிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே 3 கிராமங்களின் மையப்பகுதியான வளநாட்டில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். குறைந்த பட்சம் கிளையாவது வேண்டும். செம்மங்குடி கண்மாயை துார்வாரக்கோரி பலமுறை மனு அளித்தும் பயனில்லை. சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் மாசடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலு வலர்: 2000 எக்டேர் விவசாய நிலம் இருந்தால் மட்டுமே தனியாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும். கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஓ.,விடம் கூறி கண்மாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்துராமு, மாவட்ட தலைவர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம்: கூட்டுறவு சங்கங்களில் மூவிதழ் அடங்கல் இல்லாமல் பயிர் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வழங்க வேண்டும். அதுவரை பழைய அடங்கலை வைத்து கடன் தர வேண்டும். விவசாயிகள் கடன் வாங்கி விதைப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். மழை நிவார ணம் தொகை வருமா, வராதா, எப்போது வரும்.
கலெக்டர்: பழைய அடங்கல் மூலம் பயிர்கடன் வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். மழை நிவாரணம் விரைவில் வந்து விடும்.
பாலசுந்தர மூர்த்தி, பெரிய கண்மாய் பாசன முன்னாள் தலைவர்: வைகை அணையில் தண்ணீர் திறந்து விடும் போது வீணாகும் உபரிநீர் நிலத்தை ஈரப்படுத்த உதவும். எனவே அதற்குரிய ஷட்டர்களை 1 அடி எப்போதும் திறந்திருக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைச்சாமி, மாவட்ட செயலாளர், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம்: காட்டுபன்றி, மான்களால் பயிர் சேத மடைந்த விவசாயிகளுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள், வருவாய்த்துறை, வனத்துறையினர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
மாவட்ட வருவாய் அலுவலர்: பரமக்குடி ஆர்.டி.ஓ., விடம் தெரிவித்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
சீசனை முன்னிட்டு உரம் விற்பனை கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ரசீது தருவது இல்லை. அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கடை பெயர் விபரம் தெரிவித்தால் கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும். அலுவலர்கள் அடிக்கடி உரம், விதை விற்பனை இடங்களில் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து வட்டார வாரியாக பேசும் போது நுாறு நாள் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
பரமக்குடி தாலுகாவில் வேந்தோணி, உரப்புளி நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை அகற்றி மழைநீரை கண்மாய்களில் தேக்க வேண்டும். குளங்கள், கண்மாய், ஊருணியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
போகலுார் கண்மாய் மடை சேதமடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகிறது. மான், காட்டுபன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தினர்.
வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) பாஸ்கரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுகி, கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.