/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை அணை துார்வாராததால் ஒரு டி.எம்.சி., நீர் வீணாவதாக விவசாயிகள் புகார்
/
வைகை அணை துார்வாராததால் ஒரு டி.எம்.சி., நீர் வீணாவதாக விவசாயிகள் புகார்
வைகை அணை துார்வாராததால் ஒரு டி.எம்.சி., நீர் வீணாவதாக விவசாயிகள் புகார்
வைகை அணை துார்வாராததால் ஒரு டி.எம்.சி., நீர் வீணாவதாக விவசாயிகள் புகார்
ADDED : ஏப் 14, 2025 03:44 AM
ராமநாதபுரம் : -வைகை அணை துார் வாரப்படாததால் ஒரு டி.எம்.சி., நீர் தேக்க முடியாமல் வீணாவதாக முல்லை பெரியாறு, வைகை பாசன சங்கதின் சார்பில் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது வைகை அணை. அதில் தேக்கப்படும் நீரால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரணை முதல் மதுரை விரகனுார் வரை 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், இரண்டாம் பகுதியில் விரகனுார் முதல் பார்த்திபனுார் அணை வரையுள்ள பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரும், விரகனுார் முதல் ராமநாதபுரம் வரை 67 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
வைகை அணை 1959ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இன்று வரை அணைப்பகுதி துார் வாரப்படாததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 20 அடிக்கு சேறும் சகதியும் நிரம்பியுள்ளது. 51 அடி உயரத்திற்கு மட்டுமே தற்போது நீர் தேக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 6.8 டி.எம்.சி., யாகும். தற்போது 5.75 டி.எம்.சி., மட்டுமே தேக்கப்படுகிறது. ஒரு டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு திருப்பப்படுகிறது.
வைகை பூர்விக பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதிமூலம் தெரிவித்ததாவது: 2010ம் ஆண்டு பார்லிமென்ட் நிலைக்குழு வைகை அணையை பார்வையிட்டு துார்வார ஜப்பான் தொழில் நுட்ப நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஏனோ கிடப்பில் போடப்பட்டது.
தற்போது தங்கதமிழ்செல்வன் எம்.பி., வைகை அணைக்கு அருகிலேயே புதிய அணை ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ வைகை அணை பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.
வைகை அணை குடிநீருக்காக மட்டுமே 2 கோடி பேருக்கு பயன்படுகிறது. பாசன வசதியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் பெறும் நிலையில் உள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.-----