/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய விவசாயிகள் கோரிக்கை
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய விவசாயிகள் கோரிக்கை
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய விவசாயிகள் கோரிக்கை
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 05:07 AM

ராமநாதபுரம்: தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும் நிலையான விலை கிடைக்கவும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தென்னை விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
ராமநாதபுரம் பாரதி நகர் தனியார் மகாலில் தேங்காய் விவசாயிகள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மணிமாதவன், பொருளாளர் மோகன், துணைத்தலைவர் கதிரேசன், ஒருங்கிணைப்பாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் தங்கசாமி வரவேற்றார்.
ராமநாதபுரத்தில் தென்னை வணிக வளாகத்திற்கு கலெக்டர் ஒதுக்கிய ரூ.2கோடியினை ஆதாரமாக கொண்டு உடனடியாக கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
கூடுதல் நிதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், தென்னங்கன்றுகள் போன்றவற்றை உரிய நேரத்தில் மத்திய, மாநில அரசு, வேளாண்துறையினர் வழங்க வேண்டும்.
தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும், நிலையான விலை கிடைத்திட ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.
மத்திய அரசு 'நபெட்' நிறுவனம் மூலம் கொள்முதல் செய்த கொப்பரைகளை தனியாருக்கு குறைந்த விலைக்கு வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த கொப்பரைகளை பிழிந்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.------

