/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற வைகை அணை நீர் நீரை முறைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

ADDED : நவ 15, 2024 06:44 AM

பரமக்குடி: வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி பரமக்குடி வழியாக சென்ற நிலையில் பாசனத்திற்கு நீரை முறையாக வழங்க வேண்டும் என நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு நவ.10ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பரமக்குடியை கடந்து 2600 கன அடி வீதம் வைகை அணையில் தண்ணீர் சென்றது.
பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து மாவட்டத்திற்கு உட்பட்ட நுாற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மேலும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு உட்பட பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனளிக்கும் வகையில் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒவ்வொரு கண்மாய்களுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்லும் வகையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு பாசனத்தை முறைப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மழை நீர் உட்பட தற்போது மாவட்ட பங்கீட்டு நீர் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே ஒட்டுமொத்த பாசனத்திற்கும் உதவும் வகையில் நீரை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.