/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
/
நெல் சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
நெல் சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
நெல் சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
UPDATED : நவ 12, 2025 01:06 AM
ADDED : நவ 11, 2025 11:27 PM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் 50 சதவீதம் மட்டுமே பயிர் காப்பீடு செய்யபட்டுள்ளதால் விவசாயப் பணிகளிலும் ஈடுபட முடியாமல், பயிர் காப்பீடும் செய்ய முடியாமல் இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு நிறுவனம் சார்பில் பயிர் காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் கொடுத்து பதிவு செய்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் 13,500 எக்டேருக்கு மட்டுமே பயிர் காப்பீடு பதிவு செய்யபட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் 50 சதவீதம் நிலங்கள் மட்டுமே பதிவு செய்யபட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் இந்நிலை தான் தொடர்கிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
காப்பீடு பதிவு செய்யத் துவங்கிய போது மூவிதழ் அடங்கலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சில வி.ஏ.ஓ.,க்களுக்கு பி.எல்.ஓ. பணி கூடுதலாக வழங்கப்பட்டதால் அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது களை எடுப்பு, உரமிடுதல், பூச்சி மருந்து அடித்தல் பணிகள் நடந்து வருவதால் காப்பீடு செய்ய அலைய வேண்டியுள்ளது.
நிலங்களிலும் பணிகள் செய்ய முடியவில்லை. காப்பீடும் செய்ய முடியவில்லை. இவ்வாறு இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கிறோம். எனவே நவ.,15 கடைசி நாள் என்பதை நீட்டிப்பு செய்து நவ.,30 வரை காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.

