/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்கத்தில் வெள்ளை அடங்கல் பெறுவதற்கு... விவசாயிகள் எதிர்பார்ப்பு; பயிர் கடன் பெறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

ADDED : ஜன 13, 2025 04:01 AM
திருவாடானை: திருவாடானை தாலுகா கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வெள்ளை அடங்கல் வாங்க மறுக்கப்படுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்தது. திருவாடானை தாலுகாவில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கும் பணிகள் நடக்கிறது.
விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோ கொடுத்து விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூவிதழ் அடங்கலுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டது. வெள்ளை அடங்கலுக்கு கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கபட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் வெள்ளை அடங்கலுக்கும் பயிர் கடன் வழங்கலாம் என கூட்டுறவு அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இந்த ஆண்டும் சில கூட்டுறவு சங்கங்களில் வெள்ளை அடங்கல் வாங்குவதற்கு மறுக்கின்றனர்.
திருவாடானை விவசாயிகள் கூறியதாவது: பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்யும் போது மட்டுமே மூவிதழ் அடங்கல் வி.ஏ.ஓ.,க்கள் வழங்குகின்றனர். பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்யாத விவசாயிகள் வெள்ளை அடங்கல் கொடுத்து பயிர் கடன் கேட்டால் சில கூட்டுறவு சங்க செயலாளர்கள் வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருவாடானை வட்டார கூட்டுறவு கள மேலாளர் விஜயலிங்கம் கூறுகையில், பயிர்க்கடன் பெறுவதற்கு விவசாயிகள் வெள்ளை அடங்கல் கொடுக்கலாம். ஆனால் பயிர் இன்ஸ்சூரன்ஸ்க்கு மூவிதழ் அடங்கல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றார்.