/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையம் சேதம் விவசாயிகள் அச்சம்
/
உத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையம் சேதம் விவசாயிகள் அச்சம்
உத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையம் சேதம் விவசாயிகள் அச்சம்
உத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையம் சேதம் விவசாயிகள் அச்சம்
ADDED : பிப் 13, 2025 06:40 AM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
உத்தரகோசமங்கையில் வேளாண் துறையின் விதை சுத்திகரிப்பு நிலைய கட்டடம் அமைந்துள்ளது.1988ல் கட்டப்பட்ட இக்கட்டடம் 1990ல் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு வேளாண் அலுவலர் மற்றும் மின் பொருத்துநர் உட்பட இருவர் பணி செய்கின்றனர்.
உத்தரகோசமங்கை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறுவதற்கு தரமான வீரிய விதை நெல் சான்று அளிக்கப்பட்டு பின்னர் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் இடமாகவும் உள்ளது.
விவசாயிகளிடமிருந்து உரிய விலை பெற்று பெறக்கூடிய விதை நெல்லை சுத்திகரிப்பு செய்யக்கூடிய இயந்திரம் இங்கு உள்ளது. மழைக்காலங்களில் நெல் மூடைகளை பராமரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளது.
இருப்பினும் கட்டடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் மழை நீர் புகும் அவல நிலை நீடிக்கிறது.விவசாயிகள் கூறியதாவது:
திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விரிவாக்க மையமாக செயல்படும் உத்தரகோசமங்கை கட்டடத்தில் பல இடங்களில் சிமென்ட் பூச்சுக்கள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது.
இதுவரை எந்த ஒரு பெயின்ட் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யாமல் பாழடைந்த கட்டடம் போல் மாறி உள்ளது. கட்டடத்தின் வளாகப் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்து விஷ ஜந்துக்களின் நடமாட்டம் நிலவுகிறது. கட்டடத்தை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட நிதியை மாவட்ட வேளாண் துறை ஒதுக்காமல் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றனர்.