/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி விவசாயிகள் கூட்டமைப்பு கண்டனம்

ADDED : ஆக 25, 2025 01:18 AM
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் மலைச்சாமி தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயத்திற்கு பேரழிவு ஏற்படுத்தும் ஓ.என்.ஜி.சி., கிணறுகள் திட்டத்தை கைவிட வேண்டும். காவனுார், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, கீழச்செல்வனுார், வேப்பங்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
ஒவ்வொரு கிணறும் 2000 மீ., ஆழத்திலிருந்து 3000 மீ., வரை தோண்டப்படும் என தெரிகிறது. இதனால் நிலத்தடி நீர் முழுவதும் ரசாயனம் கலந்து நஞ்சாகும் வாய்ப்புள்ளது. குடிநீர், விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடை வளர்ப்பு என வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி 2023 டிச., 12 அன்று நடந்த விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றனர்.