/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்.24ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு தீர்மானம்
/
பிப்.24ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு தீர்மானம்
பிப்.24ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு தீர்மானம்
பிப்.24ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு தீர்மானம்
ADDED : பிப் 10, 2025 04:23 AM
பரமக்குடி: குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பிப்.24ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின், 3 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அர்ஜுனன், மாநில செயலாளர் ராமமுருகன், துணைத்தலைவர் மச்சேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு தமிழக அரசு பட்ஜெட்டில் தேவையான நிதிகளை ஒதுக்க வேண்டும். அக். 30 பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மற்றும் நவ. 10 விருதுநகரில் முதல்வர் உறுதி அளித்தபடி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். 4 ஆண்டுகால ஆட்சியில் நிதி ஒதுக்காத நிலையில், வரும் 2025-26 பட்ஜெட்டில் முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி பிப். 24ல் புதுக்கோட்டையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தனபால், பொருளாளர் பழனிச்சாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் அய்யனார், விருதுநகர் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில சட்ட ஆலோசகர் வக்கீல் ஜான் சேவியர் பிரிட்டோ பங்கேற்றனர்.