/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
முதுகுளத்துாரில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 04, 2024 05:19 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். பருவமுழையை நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில் கடந்த சிலநாட்களாகவே மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சிலநாட்களாக பலத்த காற்றுடன் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள வெண்ணீர்வாய்க்கால், விளங்குளத்தூர்,கீழக்கன்னிசேரி, கீழத்துாவல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழரத வீதி, பஜார் தெரு உட்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்பட்டனர்.
முதுகுளத்துார் அருகே விளங்குளத்துாரில் மழைக்கு நேற்றுமுன்தினம் விவசாய நிலத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறையினர் புதிய மின்கம்பத்தை மாற்றியமைத்தனர். இதனால் சில நேரம் மின்தடை ஏற்பட்டது.