ADDED : ஏப் 28, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம், சுற்றுப்புற இடங்களில் நேற்று மதியம் கோடை மழை பெய்தது. தேவிபட்டினம், கோப்பேரி மடம், இலந்தை கூட்டம், கழனிக்குடி, நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கோடை மழையால் விவசாய நிலங்களில் உழவு பணிக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுகிறது.
வயலில் நிலவும் ஈரப்பதத்தை பயன்படுத்தி கோடை உழவு பணியை மேற்கொள்ள முடியும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கோடை மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்துள்ளது.