/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் வேளாண் துறை வழங்கிய முளைப்புத்திறன் இல்லாத விதை நெல் விவசாயிகள் வேதனை
/
கடலாடியில் வேளாண் துறை வழங்கிய முளைப்புத்திறன் இல்லாத விதை நெல் விவசாயிகள் வேதனை
கடலாடியில் வேளாண் துறை வழங்கிய முளைப்புத்திறன் இல்லாத விதை நெல் விவசாயிகள் வேதனை
கடலாடியில் வேளாண் துறை வழங்கிய முளைப்புத்திறன் இல்லாத விதை நெல் விவசாயிகள் வேதனை
ADDED : டிச 21, 2024 07:08 AM
கடலாடி: கடலாடியில் வேளாண் துறையினர் வழங்கிய விதை நெல் முளைப்புத்திறன் இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.
கடலாடியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் ஆக., மற்றும் செப்., மாதங்களில் விதை நெல் விலைக்கு வாங்கினர். அக்., முதல் வாரத்தில் விளை நிலங்களில் நெல் விதைத்தும் தற்போது வரை போதிய மழை பெய்தும் வயல்களில் நெற்பயிர்கள் இதுவரை எவ்வித வளர்ச்சியும் இன்றி உள்ளது.
கடலாடியைச் சேர்ந்த விவசாயிகள் வில்வக்கனி, சோமநாதன் ஆகியோர் கூறியதாவது: கடலாடி வேளாண் விரிவாக்க மையத்தில் ஒரு நெல் ரகம் வாங்கினோம். பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் 50 கிலோ நெல் மூடை வாங்கப்பட்டது.
அக்., மாதத்தில் கடலாடி, கண்ணன் பொதுவன்குடி, நரசிங்க கூட்டம், மீனங்குடி, சாத்தங்குடி வெள்ளம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த விதை நெல் வாங்கி பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்த போது, வேறு ஒரு திட்டம் வரும் போது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார். இந்த பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே தரமான வீரியம் உள்ள விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இனிமேல் மழை பெய்தாலும் விதைப்பு செய்து பயிரைக் காப்பாற்ற இயலாது. எனவே பாதிப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கடலாடி வேளாண் அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் புகாரில் நிலத்தை ஆய்வு செய்தோம். நிலம் முறையாக பண்படுத்தப்படவில்லை. உரிய முறையில் களை எடுக்கவில்லை. இதே நெல் ரகம் பிற பகுதிகளில் நன்றாக முளைத்துள்ளது என்றனர்.

