/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதல் மையம் தேவையுள்ள விவசாயிகள் மனு கொடுங்க
/
நெல் கொள்முதல் மையம் தேவையுள்ள விவசாயிகள் மனு கொடுங்க
நெல் கொள்முதல் மையம் தேவையுள்ள விவசாயிகள் மனு கொடுங்க
நெல் கொள்முதல் மையம் தேவையுள்ள விவசாயிகள் மனு கொடுங்க
ADDED : டிச 04, 2024 04:48 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாகவும்,கண்மாய் பாசனத்திலும் 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில்ஆண்டு தோறும் நெல் சாகுபடி நடக்கிறது.வடகிழக்குபருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவேஆடிப்பெருக்கில் வயலை தயார் செய்து செப்.,ல் நெல் விதைக்கின்றனர்.
நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்துஅறுவடை நேரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம்துவங்குவது இல்லை. இதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர்.
இதனை தவிர்க்க 2024- 25ல் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் சார்பில் தேவையுள்ள இடங்களை கண்டறிந்துமுன்கூட்டியே நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபகழகம் பொது மேலாளர் மெர்லின் டாரதி கூறியதாவது: சன்னரகம் குவிண்டால் (100 கிலோ) ரூ.2450 மற்றும் பொதுரகம் குவிண்டால் ரூ.2405க்கு கொள்முதல்செய்யப்படும். ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி,திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, கமுதி மற்றும்முதுகுளத்துார் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நேரடியாக நெல் கொள்முதல்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
குறிப்பாக தங்கள்பகுதியில் நெல் கொள்முதல் மையம் தேவையுள்ளவிவசாயிகள் முழு விபரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில்மனு அளிக்க வேண்டும்.அறுவடை நேரத்தில் தாமதம் இன்றிஅங்கு நெல்கொள்முதல் மையம் திறக்க நடவடிக்கைஎடுக்கப்படும்.
விவசாயிகள் தங்களது விபரங்களை கொள்முதல் அலுவலகபணியாளர்கள் உதவியுடன் www.tncsc-edpc.in என்றஇணையதளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்யவேண்டும். இதற்குரிய படிவத்தை நேரடி நெல் கொள்முதல்நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக நெல் கொள்முதலுக்கான பணம் செலுத்தப்படும் என்றார்.