/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் பகுதியில் உரமிடுதலை தீவிரப்படுத்திய விவசாயிகள்
/
உப்பூர் பகுதியில் உரமிடுதலை தீவிரப்படுத்திய விவசாயிகள்
உப்பூர் பகுதியில் உரமிடுதலை தீவிரப்படுத்திய விவசாயிகள்
உப்பூர் பகுதியில் உரமிடுதலை தீவிரப்படுத்திய விவசாயிகள்
ADDED : நவ 18, 2024 07:01 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் பகுதியில் நெல் வயல்களில் உரமிடும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் முளைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பயிர்களின் வளர்ச்சிக்கு தற்போது உரமிட வேண்டிய தேவை உள்ளது.
போதிய பருவமழை இன்றி நெல் வயல்களில் தற்போது தண்ணீர் இல்லாத நிலை உள்ளதால் அனைத்து விவசாயிகளும் முழுமையாக வயல்களுக்கு உரமிடும் பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உப்பூர், ஊரணங்குடி, பாரனுார், கலங்காப்புளி, சித்துார்வாடி, காவனுார், கொத்தியார் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பருவமழை ஏமாற்றத்தால் நெல் வயில்களில் தண்ணீரின்றி பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
இருப்பினும் நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு உரமிடுதல் அவசியம் என்பதால் வயலில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தியும், பருவமழையை எதிர்நோக்கியும் உரமிடும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.