/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 19, 2025 07:18 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம், பிச்சனார் கோட்டை, கீழக்கோட்டை, நோக்கன்கோட்டை, நெடும்புளிக்கோட்டை, கோழியார்கோட்டை, செங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குறைந்த நிலப்பரப்பில் மட்டுமே வாழை சாகுபடி செய்த விவசாயிகள், தற்போது வாழை சாகுபடியில் கூடுதல் ஆர்வம் காட்டுவதால் சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது.
வாழை இலை, வாழை மரம், வாழைக்காய், வாழைப்பழம் என வாழை மரத்தின் அனைத்தும் வருவாய் தரக்கூடியதாக உள்ளதுடன், விசேஷ தினங்களில் கூடுதல் வருவாய் தரக்கூடியதாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெளி மாவட்டங்களில் இருந்து வாழை இலை, வாழைக்காய் உள்ளிட்டவைகள் அதிகம் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்யும் வாழை இலை, மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாழை சாகுபடி பரப்பளவை மேலும் அதிகப்படுத்தும் வகையில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செலவிற்கான மானிய நிதி உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

