/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
/
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 01, 2024 04:55 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கடந்த மாதம் மிளகாய் விதைப்பு பணியை மேற்கொண்டனர்.
நெல் விவசாயத்தைப் போல மிளகாய் விவசாயத்திற்கும் அதிக தண்ணீர் தேவை இல்லை என்பதாலும், வறட்சியிலும் லேசான ஈரப்பதத்திலும் மிளகாய் அதிக மகசூல் கொடுக்கும் தோட்டக்கலை பயிர் என்பதாலும் மிளகாய் சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டிருந்த மிளகாய் செடிகள் நவ., டிச., மாதங்களில் ஏற்படும் கன மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதனால் விவசாயிகள் கிராமப்புற கண்மாய் கரைகள், மேட்டு பகுதிகளில் மிளகாய் விதைகளை மொத்தமாக துாவி நாற்றுகள் உற்பத்தி செய்கின்றனர்.
கன மழையின் போது வயல்களில் உள்ள மிளகாய் செடிகள் பாதிப்படையும் நேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்துள்ள மிளகாய் செடிகளை பறித்து வயலில் நடவு செய்வார்கள். தற்போது மிளகாய் நாற்று உற்பத்தி செய்வதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.