/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களையெடுக்க ஆள் கிடைக்காமல் முதுகுளத்துார் விவசாயிகள் தவிப்பு
/
களையெடுக்க ஆள் கிடைக்காமல் முதுகுளத்துார் விவசாயிகள் தவிப்பு
களையெடுக்க ஆள் கிடைக்காமல் முதுகுளத்துார் விவசாயிகள் தவிப்பு
களையெடுக்க ஆள் கிடைக்காமல் முதுகுளத்துார் விவசாயிகள் தவிப்பு
ADDED : நவ 12, 2024 04:54 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதிகளில் நெற்பயிருக்கு சமமாக களை வளர்ந்துஉள்ளதால் விவசாயிகள்சிரமப்படுகின்றனர். களை எடுக்க வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட செல்வநாயகபுரம், கீரனுார், காக்கூர், குமாரக்குறிச்சி, ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால், சித்திரங்குடி, கீழத்துாவல், மரவெட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர்.
நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்துள்ளனர். முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்கிறது. இதனால் நெற்பயிர்கள் ஓரளவு வளரத் துவங்கியுள்ளது.நெற்பயிர்களுக்கு சமமாக களைகள் அதிகமாக வளர்ந்துள்ளது.
தற்போது களைக்கொல்லி மருந்து அடித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். இந்நிலையில் களைகள் எடுக்க கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.