/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் செடிகளுக்கு சேலை வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
/
மிளகாய் செடிகளுக்கு சேலை வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
மிளகாய் செடிகளுக்கு சேலை வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
மிளகாய் செடிகளுக்கு சேலை வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
ADDED : டிச 16, 2024 07:10 AM

கமுதி : கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டியில் மிளகாய் பயிர்களை பாதுகாப்பதற்காக சேலையில் வேலி அமைத்து பாதுகாக்கின்றனர்.
கமுதி அருகே பசும்பொன், கோட்டைமேடு, பேரையூர், கோவிலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்களுக்கு அடுத்தபடியாக மிளகாய் விவசாயம் செய்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மிளகாய் நாற்றுகள் பறித்து விவசாய நிலத்தில் நட்டு வைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
மிளகாய் விவசாயத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
இதே போன்று கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மிளகாய் செடிகள் நன்கு வளர்ந்து வருகிறது.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைகிறது.
இதையடுத்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் மிளகாய் வயலை சுற்றிலும் சேலையில் வேலி அமைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதேபோல் அமைத்தும் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தின.