/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் பிப்.7 முதல் விவசாயிகள் போராட்டம்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் பிப்.7 முதல் விவசாயிகள் போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் பிப்.7 முதல் விவசாயிகள் போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் பிப்.7 முதல் விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜன 31, 2024 01:47 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பிப்.7 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
தி.மு.க,, அரசின் தேர்தல் வாக்குறுதியில் தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர்.
விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. உள் நாட்டு எண்ணெய் வகைகளான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஊக்கப்படுத்தாமல் அரசு இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து மாதம் 1 கோடியே 96 லட்சம் லிட்டர் பாமாயிலை லிட்டர் ரூ.100க்கு இறக்குமதி செய்கிறது.
இதில் லிட்டருக்கு ரூ.70 மானியமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ரூ.30க்கு பாமாயில் விற்கப்படுகிறது. மக்களின் வரி பணத்தில் ரூ.1500 கோடி பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 10 ரூபாயாக குறைந்துவிட்டது. பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்களை தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கம், இந்திய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பிப்.7 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.