ADDED : பிப் 24, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயிகளுக்கு பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் விவசாயி சுப்கரன்சிங் இறந்தார். நுாறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர். விவசாயிகள் தாக்கப்பட்டதால் மத்திய அரசை கண்டித்து திருவாடானையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.