ADDED : ஜூலை 07, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி பரமக்குடியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டல தலைவர் மதுரை வீரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் காஜா நஜிமுதீன் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பசுமலை, துணைச் செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர்.அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் மற்றும் நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும். பரமக்குடி கிழக்கு பகுதியில் புதிய மது கடை திறக்க கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.