ADDED : ஏப் 17, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பரமக்குடி --ராமநாதபுரம் வரை நான்குவழிச்சாலை பணிக்காக அச்சுந்தன்வயல் கிராமத்தில் விவசாய நிலங்கள் குடியிருப்புகளை அகற்றி வேலை நடக்கிறது. இதற்குரிய இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாக கூறி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி முன்னிலையில் விவசாயிகள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
--
