/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலர் களம் அமைப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை
/
உலர் களம் அமைப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சிறு குறு தானியங்களான கம்பு, சோளம், குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஒரு சில கிராமங்களில் விளைச்சலுக்கு வந்துள்ள நிலையில் சாயல்குடியில் இருந்து கடலாடி செல்லும் பிரதான சாலையோரங்களில் விளைவிக்கப்பட்ட தானிய வகைகளை கொட்டி உலர்த்தும் செயலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் தானிய வகைகள் மற்றும் நெல்மணிகளை உலர்த்துவதற்கான உரிய உலர் களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.