/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவமழை பொய்த்ததால் தண்ணீர் தெளித்து மிளகாய் நாற்றை காப்பாற்றும் விவசாயிகள்

ADDED : நவ 13, 2024 05:02 AM

கமுதி : பருவமழை பொய்த்து வருதால் கமுதி பகுதியில் வயல்களில் தண்ணீர் தெளித்து மிளகாய் நாற்றுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
கமுதி வட்டாரம் கோவிலாங்குளம், புதுக்கோட்டை, பசும்பொன், அபிராமம், தரைக்குடி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவரியாக நெல், மிளகாய் விவசாயம் செய்கின்றனர். தற்போது பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன் அவ்வப்போது மழை பெய்தது. கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள் விளை நிலங்களில் ஒரு பாதியில் மிளகாய் விதை துாவி நாற்று வளர்க்கத் துவங்கினர். இதையடுத்து மிளகாய் நாற்று குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்தவுடன் விவசாய நிலத்தில் நட்டு பராமரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மிளகாய் நாற்று வளர்த்து வந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் கருகியது. இதனால் விவசாயிகள் சாலையோரம் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் காவிரி குழாயில் உடைந்து வரும் தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து தெளித்து மிளகாய் நாற்றுகளை காப்பாற்றி வருகின்றனர்.
ஒருசிலர் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இந்த ஆண்டு பருவமழை பெய்யாவிட்டால் நெல், மிளகாய் உள்ளிட்ட விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.