/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடியில் உழவுப்பணியை துவக்கிய விவசாயிகள்
/
ஆடியில் உழவுப்பணியை துவக்கிய விவசாயிகள்
ADDED : ஜூலை 22, 2025 11:55 PM
தேவிபட்டினம்; ஆடி மாதம் துவங்கியதை தொடர்ந்து தேவிபட்டினம் பகுதியில் விவசாயிகள் விளைநிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கழனிக்குடி, இலந்தை கூட்டம், நாரணமங்கலம், மாதவனுார், சிங்கனேந்தல், சம்பை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் அதிகளவில் நெல் விவசாயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு நெல் அறுவடைக்கு பின் விளை நிலங்களில் நிலவிய ஈரப்பதத்தை பயன்படுத்தி அவ்வப்போது விவசாயிகள் கோடை உழவு செய்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து விளை நிலங்களை நெல் விதைப்புக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் விதமாக விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் உழுது மண்ணை பொலிவு படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆவணி மாதத்தில் நெல் விதைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆடி மாதத்தில் விவசாய நிலங்களை உழவு செய்து, விதைப்புக்கு ஏற்ற வகையில் மண்ணை வளப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.