/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவ மழையின்றி விதைத்த நெல்லை பயிராக்க போராடும் விவசாயிகள்
/
பருவ மழையின்றி விதைத்த நெல்லை பயிராக்க போராடும் விவசாயிகள்
பருவ மழையின்றி விதைத்த நெல்லை பயிராக்க போராடும் விவசாயிகள்
பருவ மழையின்றி விதைத்த நெல்லை பயிராக்க போராடும் விவசாயிகள்
ADDED : அக் 03, 2024 04:26 AM

ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலத்தில் பருவமழை ஏமாற்றத்தால் விதைத்த விதை நெல்லை பயிராக வளர்க்க ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு பருவமழையை எதிர்பார்த்து, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.
விவசாயிகள் நெல் விதைப்பு செய்த பின்னர் தொடர்ந்து நிலவிய வறட்சியின் காரணமாக, விதைப்பு செய்த நெல் விதைகள் ஈரப்பதம் இன்றி முளைப்பு கொள்ளாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் சில பகுதிகளில் நெல் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் இல்லாததால், நெல் விதைகள் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
செங்குடி, வரவணி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், வண்டல் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விதைகள் முளைப்பதுக்கேற்ற ஈரப்பதம் இல்லாததால், ஆழ்துளை கிணறு நீரை விவசாயிகள் நெல் விதைப்பு செய்த வயல்களுக்கு பாய்ச்சி நெல் விதையை முளைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக நெல் பயிர்கள் வளர்ச்சி அடைந்து மகசூல் கொடுக்கும் நேரத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக மட்டுமே, ஆழ்துளை கிணற்று நீரை விவசாயிகள் பயன்படுத்தும் நிலையில், நெல் விதைகளை முளைக்க வைப்பதற்கே, ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு கூடுதலாக ரூ.5000 வரை செலவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.