/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டு பகுதி மாடுகளால் விவசாயிகள் தவிப்பு
/
காட்டு பகுதி மாடுகளால் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜன 29, 2024 11:59 PM
ஆர்.எஸ்.மங்கலம்- ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதியில் காட்டு மாடுகள் மகசூல் அடைந்த பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் அடர்ந்த மரங்கள் நிறைந்த கரட்டு பகுதியில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
பெரிய கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால், காட்டுப்பகுதியில் உள்ள மாடுகள் விவசாயிகள் நிலங்களை ஒட்டிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
செங்குடி, சேத்திடல், எட்டியத்திடல், முத்துப்பட்டினம், வரவணி, மருதவயல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மகசூல் நிலை அடைந்துள்ள நெற்கதிர்களை மாடுகள் கூட்டமாக சேதப்படுத்தி வருவதுடன், மிளகாய், பருத்தி, எள் உள்ளிட்ட விவசாய பயிர்களையும் மாடுகள் சேதப்படுத்துகின்றன.
இரவு நேரங்களில் விவசாயிகள் வயல்வெளிகளில் தங்கி காவல் காத்து மாடுகளை விரட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.