/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீரில் மூழ்கிய நெற்பயிரை கதிரடிக்கும் விவசாயிகள்
/
நீரில் மூழ்கிய நெற்பயிரை கதிரடிக்கும் விவசாயிகள்
ADDED : ஜன 28, 2025 05:22 AM

பெரியபட்டினம்: -பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு, கிருஷ்ணாபுரம், கொல்லந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கியதால் நெற்பயிரை அறுவடை செய்து கதிரடிக்கின்றனர்.
இப்பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரில் நெற்பயிர்கள் உள்ளதால் அவற்றை அறுப்பதற்கு கதிர் அறுக்கும் இயந்திரங்களால் இயலவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் வரப்போரங்களில் மிதக்கும் மெத்தைகளை பயன்படுத்தி கதிர்களை அறுத்து அவற்றில் வைத்து கரைக்கு கொண்டு வருகின்றனர்.
வண்ணாங்குண்டு பகுதி விவசாயிகள் கூறியதாவது:
நடப்பு ஆண்டில் அதிகளவு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் சிரமத்தை சந்தித்துள்ளோம். இதனால் விவசாயக் கூலியாக பெண்களுக்கு ரூ.500 ஆண்களுக்கு ரூ.1000 வீதம் கூலி கொடுத்து நெல் அறுவடை செய்கிறோம்.
சேகரிக்கப்பட்ட நெற்கதிர்களை பழமையான முறையில் கல்லில் அடித்து ஈரம் உள்ள நெல்மணிகளை உலர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்தும் கூடுதல் செலவு செய்து மகசூல் எடுக்க வேண்டியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

