/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிவாரணம் தராத அரசை கண்டித்து விவசாயிகள் ஆக.18ல் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

ADDED : ஜூலை 20, 2025 11:00 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை, பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆக., 18ல் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைந்த நெற்பயிர்கள் தொடர் மழை காரணமாக கடலாடி பகுதிகளில் பாதிக்கப்பட்டது.
பருவம் தவறி பெய்த மழையால் 16 ஆயிரத்து 500 எக்டேர் நிலங்களில் பயிர் செய்திருந்த மிளகாய் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் பாக்கியநாதன் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் நெல், மிளகாய் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.75ஆயிரம் வரை செலவிட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதற்கான இழப்பீடு கேட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் போராட்டம், கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம், குறை தீர்க்கும் கூட்டத்தில் வெளிநடப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் அரசு கண்டு கொள்ளவில்லை.
மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2500ம், நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.8000 வழங்கக்கோரி வரும் ஆக., 18 ல் கலெக்டர் அலுவலகத்தில் கஞ்சி தொட்ட திறக்கும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.