/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவமழை ஏமாற்றத்தால் புன்செய் நிலங்களில் நெற்பயிரை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள்
/
பருவமழை ஏமாற்றத்தால் புன்செய் நிலங்களில் நெற்பயிரை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள்
பருவமழை ஏமாற்றத்தால் புன்செய் நிலங்களில் நெற்பயிரை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள்
பருவமழை ஏமாற்றத்தால் புன்செய் நிலங்களில் நெற்பயிரை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள்
ADDED : நவ 22, 2025 02:37 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பருவமழை ஏமாற்றத்தால் புன்செய் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை அழித்துவிட்டு எள், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
ஆர்.எஸ்மங்கலம், திருவாடானை தாலுகாக்கள் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், செப்., மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது.
அதன் பின்பு பெய்த மழைக்கு நெற்பயிர்கள் முளைத்த நிலையில் அப்போது நிலவிய ஈரப்பதத்தை பயன்படுத்தி களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக நெற்பயிர்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக உரமிடுதல் அவசியம். இந்த நிலையில் பருவமழை ஏமாற்றத்தால் உரமிடுதலுக்கு வயல்களில் போதிய தண்ணீர் இல்லாததால் உரமிடும் பணியை விவசாயிகள் மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், நெற்பயிர்களின் வயதுக்கு ஏற்ப பயிர்கள் வளர்ச்சி இன்றி உள்ளது. இந்நிலையில், பருவ மழை பெய்தாலும், முழுமையான மகசூலை பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் நன்செய் நிலங்களை தவிர்த்து புன்செய் நிலங்களில் உள்ள நெற்பயிர்களை உழுது அழித்துவிட்டு எள் பருத்தி, உள்ளிட்ட பயிர்களை விதைப்பு செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் வயல்களில் உள்ள நெற்பயிர்களை உழவு செய்து கார்த்திகை பட்டத்தில் எள் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

