sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூட்டுறவு சங்கங்களில் பெயரளவில் உரம் வினியோகத்தால் விவசாயிகள் அதிருப்தி

/

கூட்டுறவு சங்கங்களில் பெயரளவில் உரம் வினியோகத்தால் விவசாயிகள் அதிருப்தி

கூட்டுறவு சங்கங்களில் பெயரளவில் உரம் வினியோகத்தால் விவசாயிகள் அதிருப்தி

கூட்டுறவு சங்கங்களில் பெயரளவில் உரம் வினியோகத்தால் விவசாயிகள் அதிருப்தி


ADDED : அக் 23, 2025 11:22 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் துவங்கி பயிர்கள் வளரத் துவங்கியுள்ளதால் உரத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவிற்கு உரம் இல்லை என்கின்றனர். தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

வட கிழக்கு பருவமழையை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. இதன் படி ராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, முதுகுளத்துார், கமுதி உள்ளிட்ட இடங்களில் பருவமழையை நம்பி வயல்களை உழுது நெல் விதைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் முளைக்க துவங்கியுள்ளன. இச்சமயத்தில் உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களை அணுகும் போது அங்கு விவசாயிகள் கேட்கும் உரம் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. எனவே உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் அதிக விலைக்கு விற்பனையை தடுக்கும் வகையில் உரம் இருப்பு, விலை பட்டியலை உடனடியாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் முத்துராமு கூறியதாவது:

மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. 10 நாள் நெற்பயிர்கள் முளைத்துள்ள நிலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. உரமிட்டால் பயிர் அழுகல் தடுக்கப்பட்டு மண் இறுகி விடும். உரம் தொய்வின்றி வழங்க வேண்டும். பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில் உரம் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் கேட்கும் அளவிற்கு இல்லாமல் பெயரளவில் வழங்குகின்றனர்.

சில கடைகளில் யூரியா உரம் மூடைக்கு ( ரூ.230) ரூ.50 வரை அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். அம்மாதிரியான கடைகளை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவில் உரம் வழங்கி உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கும் உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட வேளாண்மை தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு பிரிவு உதவி இயக்குநர் நாகராஜன் கூறுகையில், 138 கூட்டுறவு சங்கங்களிலும் உரம் வினியோகம் நடக்கிறது. உரம் கூடுதல் விலைக்கு விற்றால் கண்காணிக்க வேளாண் அலுவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு உரம் இருப்பு உள்ளது. தற்போது யூரியா- கூட்டுறவு சங்கங்களில் 1452 டன், தனியார்-2500 டன், டி.ஏ.பி.,- 1272 டன், தனியார்- 1045, காம்பளக்ஸ் - 1434டன், தனியார் 3576 டன் இருப்பு உள்ளன. முழுமையாக விசாரிக்காமல் சிலர் தவறாக கூறுகின்றனர் என்றார்.--






      Dinamalar
      Follow us