/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதல் நிலையத்தில் வசூலை தடுங்க நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
நெல் கொள்முதல் நிலையத்தில் வசூலை தடுங்க நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையத்தில் வசூலை தடுங்க நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையத்தில் வசூலை தடுங்க நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 01, 2025 05:01 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.10க்கும் அதிகமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும். மழைநீரில் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம், காப்பீடு இழப்பீடு 100 சதவீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூட்டுறவு சங்கங்களின் மண்டலை இணைப்பதிவாளர் ஜீனு, வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு டிச., வரை முடிந்து நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஜன.,ல் பெய்த மழையில் பாதிப்பு குறித்து வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டார வாரியாக கணக்கெடுப்பு நடக்கிறது. விரைவில் நிவாரணம் பெற்றுத்தரப்படும்.
கண்ணப்பன், பரமக்குடி: பரளையாறு வழித்தடத்தை துார்வார வேண்டும். கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை. அப்போது கலெக்டர் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பதிலளிக்க கூறினார். அதைப் பொருட்படுத்தால் கண்ணப்பன் கூச்சலிட்டார்
கலெக்டர் கண்டிப்பு: அதிகாரிகள் மரியாதையாக பேச வேண்டும். நீங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்க வேண்டும். மாறாக அதிகாரிகளிடம் சத்தமிடக்கூடாது என்றார்.
மலைச்சாமி, மாவட்ட செயலாளர் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு: நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் சில இடங்களில் மட்டுமே செயல்படுகிறது என்றார்.
அப்போது சில விவசாயிகள் எழுந்து கடந்த ஆண்டு சாக்குப்பை பற்றாக்குறை, மூடைக்கு ரூ.10க்கு பதிலாக ரூ.50, 70 என கேட்டனர். அதுபோல் நடக்காமல் அதிகாரிகள் கண்காணித்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
மெர்லின் டாரதி, நுகர்பொருள் வாணிப கழகம் பொதுமேலாளர்: திருவாடானையில் நெல் கொள்முதல் செய்யவில்லை என்பதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் முன்கூட்டியே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 46 மையங்கள் உள்ளன.
விவசாயிகள் தேவை என்றால் அவ்விடத்தில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். கூடுதல் வசூல் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிக நெல் கொள்முதல் செய்ய தயாராக உள்ளோம்.
பாஸ்கர பத்மநாபன், பரமக்குடி: விவசாயிகளின் பயிர்களை மான்கள் சேதப்படுத்திவிட்டது. கலெக்டரிடம் புகார் கொடுத்தால் வனத்துறையினர் மிரட்டுகின்றனர். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. போலீசில் பொய் புகார் தருகின்றனர் என கூச்சலிட்டார்.
கலெக்டர்: உங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்துள்ளேன். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இழப்பீடு வழங்கப்படும். அதில் திருப்தியில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள். இங்கு அனைவரது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.
மரியசூசை, கருங்குடி, சோழந்துார்: 150 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து நோய் தாக்கியதில் பயிர் கருவிட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மனு அளித்தார். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
வீரமணி, கொன்னக்குடி, ஆர்.எஸ்.மங்கலம்: ரேண்டம் முறையில் நெற்பயிர் சேதத்தை முழுமையாக கணக்கெடுக்க வாய்ப்பு இல்லை. சில இடங்களை விளைச்சலை கணக்கீட்டால் காப்பீடு தொகை கிடைக்காது.
எனவே கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 33 சதவீதம் காப்பீடு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பால்கரை பகுதியில் அரசு குடோனில் வாங்கிய நெல்விதைகள் முளைக்கவில்லை. ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என பயிர்களுடன் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது விரைவில் வழங்க வேண்டும்.
மான், காட்டுபன்றிகளால் பரமக்குடி, கமுதி என மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் காட்டுபன்றிகளை சுடும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் பேசினர்.
காட்டு பன்றிகளை சுடுவதற்கு விதிமுறைகள் உள்ளன. இதற்காக விரைவில் அதிகாரிகள், விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள், குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.