/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை மழை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு
/
கோடை மழை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு
ADDED : மே 18, 2025 12:08 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான இருதயபுரம், மங்கலம், புல்லமடை, சவேரியார் பட்டணம், செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் கோடை சாகுபடியாக பருத்தி, உளுந்து, மின்னி உள்ளிட்ட பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் பருவமழையை எதிர்பார்த்து வானம் பார்த்த பூமியாக கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தற்போது தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பருத்தி செடிகள் உட்பட கோடை சாகுபடி பயிறுகள் வதங்கி வருகின்றன.
கண்மாய் பாசனம் உள்ள சில பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை சாகுபடியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை விவசாயத்திற்கு ஈரப்பதம் தேவைப்படுவதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில வாரங்களில் கோடை மழை கை கொடுத்தால் மட்டுமே இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளை காப்பாற்றுவதுடன், போதிய மகசூல் பெற முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.