sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விலை குறைவால் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பதற்கு ஆர்வமில்லாத விவசாயிகள்! 1 லட்சம் டன்  கொள்முதல் இலக்கை எட்டுவதில் தொடரும் சிக்கல் 

/

விலை குறைவால் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பதற்கு ஆர்வமில்லாத விவசாயிகள்! 1 லட்சம் டன்  கொள்முதல் இலக்கை எட்டுவதில் தொடரும் சிக்கல் 

விலை குறைவால் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பதற்கு ஆர்வமில்லாத விவசாயிகள்! 1 லட்சம் டன்  கொள்முதல் இலக்கை எட்டுவதில் தொடரும் சிக்கல் 

விலை குறைவால் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பதற்கு ஆர்வமில்லாத விவசாயிகள்! 1 லட்சம் டன்  கொள்முதல் இலக்கை எட்டுவதில் தொடரும் சிக்கல் 


ADDED : பிப் 21, 2024 11:05 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 70 இடங்களில் அரசு நேடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1 லட்சம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் அரசு விலை குறைவாக வழங்குவதால் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் 45 மையங்களில் 3500 டன் மட்டுமே இதுவரை கொள்முதல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் 2023--24ம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 717 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உத்தேச நெல் மகசூல் 4 லட்சத்து 25 ஆயிரம் டன் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1 லட்சம் டன் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை 'ஏ' ரகங்களுக்கு குவிண்டால் ரூ.2310, சாதாரண ரகங்களுக்கு -ரூ.2265 என அரசால் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம், முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, போகலுார் உள்ளிட்ட பகுதிகளில் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகளவில் ஜோதி மட்டை கேரளா செல்வதாலும், ஆர்.என்.ஆர்., ரகம் (பொன்னி, பிரியாணி அரிசி) நெல்லுக்கு தனியார் வியாபாரிகள் அதிக விலையாக குவிண்டாலுக்கு ரூ.3000 வரை தருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க ஆர்வம் காட்டவில்லை.

இதனால் 70 கொள்முதல் மையங்களில் 45 மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. 1 லட்சம் டன் இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

* நாங்க ரெடியா இருக்கோம்:இதுகுறித்து ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் மெர்லின் டாரக்ஸ் கூறியதாவது:

நான் பொறுப்பேற்று 15 நாட்கள் தான் ஆகிறது. நான் வரும் போது 170 டன் தான் இருந்தது. விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 3500 டன் வந்துள்ளது. நெல் கொள்முதல் செய்ய தயராக உள்ளோம். இலக்கை அடைய விவசாயிகள் ஒத்துழைப்பு அவசியம்.

கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் புகார் இருந்தால் மாநில உழர் மையத்தின் கட்டணமில்லாத தொலைபேசி 18005993540 மற்றும் ராமநாதபுரம் அலுவலகத்தை 04567-230 539 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்றார்.---






      Dinamalar
      Follow us