/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வி.ஏ.ஓ.,க்கள் தங்கியுள்ள இடம் தெரியாமல் தவிக்கும் விவசாயிகள்; பயிர் காப்பீடு செய்ய அடங்கல் வாங்க முடியல...

ADDED : நவ 09, 2024 05:48 AM

திருவாடானை: வி.ஏ.ஓ.க்கள் தங்கி இருக்கும் இடம் தெரியாததால் பயிர் காப்பீடு செய்வதற்காக மூவிதழ் அடங்கல் வாங்கச் செல்லும் விவசாயிகள் தவிக்கின்றனர்.
திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்யத் துவங்கியுள்ளனர்.
ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை தயார் செய்து பதிவு செய்து வருகின்றனர். இதில் மூவிதழ் அடங்கல் வாங்க செல்லும் விவசாயிகள் வி.ஏ.ஓ.,க்கள் எங்கு தங்கியுள்ளனர் என தெரியாமல் அலைகின்றனர்.
திருவாடானை தாலுகாவில் உள்ள பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள் சேதமடைந்து விட்டன. இதனால் அந்த குரூப்களில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்கள் அருகில் உள்ள ஊர்களில் வாடகை கட்டடங்களில் தங்கி பணியாற்றுகின்றனர்.
இதனால் எந்த குரூப் வி.ஏ.ஓ., எங்கு தங்கியுள்ளார் என்பது தெரியாமல் பெண்கள் உட்பட நிறைய விவசாயிகள் அலைகின்றனர். இது குறித்து முகிழ்த்தகம் விவசாயிகள் கூறியதாவது:
முகிழ்த்தகம் வி.ஏ.ஓ., திருவாடானை மேல ரதவீதியில் தங்கியுள்ளார் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அங்குள்ள அறை பூட்டியிருந்தது. காலை 10:00 மணிக்கு சென்ற நாங்கள் மதியம் 12:00 மணி வரை காத்திருந்தோம். அலைபேசி எண்ணும் இல்லை என்றனர்.
தாசில்தார் அமர்நாத் கூறுகையில், வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக இருப்பதால் சில வி.ஏ.ஓ.,க்கள் மூன்று குரூப் வரை சேர்த்து பணியாற்றுவதால் நிலையான இடங்களில் தங்க முடியவில்லை என்றார்.