/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானாவரி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிப்பு பருவமழைக்கு காத்திருப்பு

ADDED : செப் 24, 2024 04:31 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து கவலையில் உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆனந்துார், ராதானுார், திருத்தேர்வலை, கூடலுார், நத்தக்கோட்டை, செங்குடி, வரவணி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன் பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
நெல் விதைப்பு செய்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் நெல் முளைப்புக்கேற்ற பருவ மழை பெய்யாததால் விதைப்பு செய்த வயல்களில் உள்ள நெல் விதைகள் முளைப்புத்திறனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை இல்லாததால் மயில், கவுதாரி உள்ளிட்ட பறவைகள் நெல் விதைகளை இரைகளாக்கி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து பருவமழை இல்லாததால் நெல் விதைகளின் தன்மைக்கு ஏற்ப சில பகுதி விவசாய நிலங்களில் மீண்டும் நெல் விதை விதைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள், தினம், தினம் பருவமழையை எதிர்பார்த்து சோகத்துடன் காத்திருக்கின்றனர்.