/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுவடை செய்தவுடன் நெல்லை உடனடியாக விற்கும் விவசாயிகள்
/
அறுவடை செய்தவுடன் நெல்லை உடனடியாக விற்கும் விவசாயிகள்
அறுவடை செய்தவுடன் நெல்லை உடனடியாக விற்கும் விவசாயிகள்
அறுவடை செய்தவுடன் நெல்லை உடனடியாக விற்கும் விவசாயிகள்
ADDED : ஜன 13, 2024 04:10 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் உடனடியாக விற்பனை செய்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நெற்களஞ்சியமாக திகழும்திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் சில பகுதிகளில் தற்போது இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள்நடக்கின்றன.
விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்திருந்த குறுகிய கால நெற்பயிர்களான ஜோதி, ஆர்.என்.ஆர்., போன்ற நெல் ரகங்கள் தற்போது மகசூல் நிலை அடைந்து அறுவடை நடக்கிறது.
அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தி அறுவடை செய்தவுடன் அங்கேயே வயலில் வைத்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். ஆர்.என். ஆர்., நெல் ரகம் கடந்த வாரத்தில் 62 கிலோ மூடை ரூ.1800க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஈரப்பதம் ஏற்பட்டதால் தற்போது சில பகுதிகளில் ரூ.1680 முதல் ரூ.1750 வரை கொள்முதல் செய்கின்றனர். அதே போல் ஜோதி (62 கிலோ) மூடை தற்போது ரூ 1400க்கு கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை உடனடியாக செலுத்துவதற்காக அறுவடை செய்ததும் உடனடியாக விற்பனை செய்கின்றனர்.