/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பந்தல் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள்
/
பந்தல் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள்
பந்தல் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள்
பந்தல் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள்
ADDED : பிப் 19, 2024 06:23 AM

ரெகுநாதபுரம், : ராமநாதபுரம் நகர் பகுதியில் ரெகுநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
ரெகுநாதபுரம், நயினாமரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, சக்திபுரம், நேருபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பந்தல் அமைத்து கொடியில் படரும் பாகற்காய், பீர்க்கன் காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
நயினாமரைக்கான் விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள்உள்ளன. அவற்றில் ஊடுபயிராக காய்கறி தோட்டம் அமைத்துள்ளோம். தரையில் விளையக்கூடிய பூசணி, சுரைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான பந்தல் அமைத்து அவற்றில் கொடியில் வளரக்கூடிய காய்களை பயிரிட்டு வளர்க்கிறோம்.
இங்கு விளைவிக்கப்படும் காய்கள் ராமநாதபுரம் நகர் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. முற்றிலும் இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறோம். நல்ல பருமனும், சுவையும் உள்ள காய்கறிகள் விரும்பி வாங்கப்படுகிறது என்றனர்.

