ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே வேம்பாரில் பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த சர்ப்பக்காவடி மண்டபம் உள்ளது. திருச்செந்துாருக்கு செல்லக்கூடிய பக்தர்கள் இங்குள்ள மண்டபத்தில் தங்கி சர்ப்ப காவடி உள்ளிட்டவைகளை எடுத்து பாதயாத்திரையாக செல்வது முன்பு வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மண்மேவிய சர்ப்ப காவடி மண்டபத்தை துாய்மை செய்யும் பணி நடந்தது.
சுசீந்திரம் சிவமுருகேசன் மற்றும் துாத்துக்குடி அடியார்கள் உழவாரப்பணி குழு தலைமையில் ஏராளமான சிவனடியார்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை மாரியூர் முன்னை அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.அன்னதானம் மற்றும் பஜனை நடந்தது.
