/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்திணை மரபணு பூங்காவிற்கு கை கொடுக்கும் பண்ணை குட்டை கோடையிலும் பசுமை
/
ஐந்திணை மரபணு பூங்காவிற்கு கை கொடுக்கும் பண்ணை குட்டை கோடையிலும் பசுமை
ஐந்திணை மரபணு பூங்காவிற்கு கை கொடுக்கும் பண்ணை குட்டை கோடையிலும் பசுமை
ஐந்திணை மரபணு பூங்காவிற்கு கை கொடுக்கும் பண்ணை குட்டை கோடையிலும் பசுமை
ADDED : ஏப் 23, 2025 06:59 AM

திருப்புல்லாணி :  திருப்புல்லாணி அருகே அச்சடிபிரம்பு கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் உள்ள ஐந்திணை பாலை நில மரபணு பூங்கா இங்குள்ள பண்ணைக்குட்டைகளால் கோடையிலும் பசுமையாக அமைந்துள்ளது
கடந்த 2015ல் அப்போதைய முதல்வர் ஜெ., ரூ. 7 கோடியில் 25 ஏக்கரில் ஐந்திணை பூங்காவை 10 ஏக்கரில் காம்பவுண்டு சுவர் வசதியுடன் அமைத்தார். அதன் பின் பகுதியில் 15 ஏக்கரிவில் ஐந்திற்கும் அதிகமான பண்ணை குட்டைகள் உள்ளன.
ஐந்திணை பூங்காவில் குரோட்டன்ஸ் செடிகள், மலர் செடிகள், பழக்கன்றுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நர்சரிகளும் பராமரிக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பொழுதை கழிப்பதற்கான பல்வேறு அம்சங்களுடன் திகழ்கிறது.
நீண்ட நெடிய புல்வெளிகள் மற்றும் பசுமை தாவரங்களுக்கு கோடையிலும் சமாளிப்பதற்கு பண்ணை குட்டைகள் கை கொடுக்கின்றன. பருவ மழைக் காலங்களில் தேக்கப்படும் தண்ணீர் மற்றும் கோடை காலத்தில் உள்ள மழை நீர் உள்ளிட்டவைகள் வருடம் முழுவதும் பயன் தருகின்றன.
பண்ணை குட்டையில் இருந்து மோட்டார் பம்பு செட்டு மூலமாக அங்குள்ள பூச்செடிகள் மற்றும் பூக்களுக்கு தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 30ம் சிறியவர்களுக்கு ரூ.15 வசூலித்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன.
விவசாயிகளுக்கான மிளகாய் நாற்றுகள், மண்புழு உரங்கள் பல்வேறு வகையான செடி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

